தமிழக மக்களிடையே ரஜினிகாந்த் செல்வாக்கு பெற்றவர் என்பதையோ அந்த செல்வாக்கை அவர் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் என்பதையோ யாரும் மறுப்பதற்கில்லை.ஆனால் அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்; தோல்வியடைந்தும் இருக்கிறார் என்பதே நாம் கவனிக்க வேண்டிய செய்தி.
அவரே விட்டாலும் ஊடகங்கள் அவரை விடுவதாக இல்லை. கடந்த முறை ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தபோது பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடர்பான செய்திகளைக் காட்டிக்கொண்டிருந்த அத்தனை ஊடகங்களும் உடனுக்குடனே ரஜினி-ரசிகர்கள் சந்திப்பைக் காட்டத் தொடங்கி விட்டன. ஜோதிடர் ஷெல்வி போன்றவர்களைப் பேச வைத்து, தீவிர இந்துமதப் பற்றாளரான அந்த மீசையும் தாடியும் வெச்ச குழந்தையின் மனதை மதவாத சக்திகளே கலைத்துவிடப் பார்க்கின்றன.
தன்னை எப்போதும் முதலிடத்தின் பரபரப்பிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் ரஜினிகாந்த், விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்ட சிவாஜி, அமிதாப், 87 வயதிலும் தமிழக முதல்வராக தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி, தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையான மறைந்த முதல்வர் ஜெயலலிதா என அனைவரிடமும் அருகருகே இருந்து பாடம் படித்திருக்கிறார்.தன் முதலிடத்தை அவர் விட்டுக்கொடுக்கவோ, இழக்கவோ விரும்புவதில்லை.தன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் பரபரப்பான பிரபலமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளவும் வேண்டியதைச் செய்து கொண்டிருப்பார்.
அவர் அரசியல் பேசுகிறாரோ, இல்லையோ, அரசியல் அவரைப் பேசும்படி செய்துள்ளார்.அவர் அரசியலுக்கு வருகிறாரோ, இல்லையோ தேர்தல் அரசியலில் வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ ஆனாலும் தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரம் என்ற பெயரைத் தக்கவைக்க அவர் எடுக்கும் முயற்சிகளிலும் முடிவுகளிலும் பெயரளவில் அவர் பேசும் அரசியலிலும் அவருக்கு வெற்றி நிச்சயம்.
தன் திரையுலக வாழ்வின் முழுமையையும் நிறைவையும் தானும் உணர்ந்து கொண்டு அனைவரும் உணரும் வகையில் "கபாலி"யை முன்னுதாரணமாகக் கொண்டு அதை விடச் சிறப்பான படங்களைத் தர வேண்டும் என்பதே அவரது நலம் நாடுபவர்களின் எண்ணமாகும்,
இன்று மாநிலத்தின் ஆளுங்கட்சியையே பாஜக ஆட்டி வைக்கிறது என்று சொல்லப்படும் சூழ்நிலையில், ரஜினி பாஜகவின் மேல் ஒருவகை அபிமானம் இருந்தாலும் கூட, அவ்வாறு ஆட்டுவிக்கப்படும் ஆளாக இருக்கவில்லை என்பதே மக்களுக்கு அவரிடமிருந்து தேவையான விஷயமாகும்.
களத்தில் இறங்க அவசரமில்லை என அண்மையில் அறிவித்திருந்த ரஜினி இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் அரசியலில் அவரது பங்கு குறித்து பேசும் அவசியம் இல்லாமல் போய்விடும் என உணர்ந்திருக்க வேண்டும்,
சினிமாவில் நடக்கும் கட்டணக்கொள்ளை, கந்துவட்டி கொடுமை, அவரது பள்ளியில் உள்ள சிக்கல்கள் இது குறித்து முதலில் கவனித்தால் அவர் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை வளர வாய்ப்பாக அமையும். அது அவரது ரசிகர்களுக்கு அவர் தரும் பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக