காற்று
சுவரைத் தாண்டி
வளர்ந்த கிளையை
வெட்டும்படி
வீட்டு வாசலில்
சருகை உதிர்த்ததற்காக
சண்டை போடும்
அண்டை வீட்டுக்காரர்களிடம்
எந்த சலனமுமில்லாமல்
அவர்கள் சுவாசப்பையில்
சங்கமித்துவிட்டு வருகிறது
என் வீட்டு மரக்காற்று.
வளர்ந்த கிளையை
வெட்டும்படி
வீட்டு வாசலில்
சருகை உதிர்த்ததற்காக
சண்டை போடும்
அண்டை வீட்டுக்காரர்களிடம்
எந்த சலனமுமில்லாமல்
அவர்கள் சுவாசப்பையில்
சங்கமித்துவிட்டு வருகிறது
என் வீட்டு மரக்காற்று.
இதயத்தில் நீ
நான்
உன் பார்வையில் தானே
விழுந்தேன்!
நீ
எப்படி விழுந்தாய்
எடுக்க முடியாத
என் இதய
உண்டியலில்?
கானல்
அதே உயரம்
அதே தேகம்
அதே நிறம்
அதே ஆடை ஒப்பனை
ஆவலுடன் அருகில்
வந்தால்
நீ இன்றி வேறு பெண்
என்னை
அபகரித்து
வேறொருவனுக்கு
அடைக்கலமாகிப்
போனவளே!
நான்
செல்லுமிடமெல்லாம்
ஏதோ ஒரு
பெயர்ப்பலகையில்
யாரோ
உச்சரித்த
உன் பெயர் ஒலியில்
ஏமாந்து
நிலை திரும்பும்
போதெல்லாம் உணர்கிறேன்
உன் நினைவு வந்து
அடித்த வலியே!
பூக்காரி
வகிடு எடுத்த
வாட்ட முகக்காரி
வயிற்றைச் சுருக்கி
ஆழத்திலிருந்து ஓசை
எழுப்புகிறாள்
முழத்தின் விலையைக் கூற
வாடும் பூக்களுக்கு
நீர் தெளித்தபடி....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக