திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மணிரத்னத்தின் இருவர்




































மணிரத்னத்தின் பார்ப்பனிய புத்தி இருவரை ஒரு எம்ஜிஆர் படமாகவே கொடுத்து தமிழ்நாடு அரசியலில் கதாநாயகன் என எம்ஜிஆரை பதிவு செய்ய முயல்கிறது.

பராசக்தி,ராஜாராணி,ரங்கோன் ராதா என கழக திரைப்படங்களில், கலைஞரின் திரைப்படங்களில் கதாநாயகனாக ஆளுமை செலுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சுலபமாக தவிர்க்கப்பட்டிருக்கிறார்.முதல் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பதிவு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் மறுக்க முடியாத மாபெரும் தத்துவங்களாக வாழ்ந்து, மறைந்தாலும் மறையாத மாமனிதர்களாக மக்கள் மனங்களில் வலம் வரும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரை வெறும் படமாகவே மாட்டி, கலைஞர், எம்ஜிஆரின் கதை தான் இது என்று நம்பவைப்பதற்கான குறியீடுகளாக மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்.

பேரறிஞர் அண்ணா(நாசர்)வின் பாத்திரத்தையே அலட்சியமாக கையாளும் மணிரத்னம், ராஜாத்தி அம்மாள்(தபு),ஜெயலலிதா(ஐஸ்வர்யா ராய்) இவர்களை ஆளுமைகளின் காதலிகளாக சித்தரிப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறார்.

இரண்டு அரசியல் ஆளுமைகளை பற்றிய படம் என்று சொல்லிக்கொண்டு அரசியலே சிறிதும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்.கற்பிக்கப்பட்ட எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை படம் முழுவதும் தூக்கி சுமந்திருக்கிறார் மணிரத்னம்.

"ஒருநாள் செங்கோல் என் கைக்கு வரும்-அன்று உன் கனவும் என் கனவும் ஒன்றாக நிறைவேறும்" என்று பிரகாஷ்ராஜ் கவிதை பாடி படத்தை முடிச்சி கட் பண்ணி ஓபன் பண்ணா இங்க 1997ல கலைஞர் ஆட்சி.

1987-1997 வரை எம்ஜிஆர் மீதான கதாநாயக பிம்பத்தை easyயா extend பண்றார் நம்ம வைரமுத்து.

அடப்பாவிகளா ஏற்கனவே நேத்து வந்த பசங்க எல்லாம் நம்மள திருட்டு திராவிடம்ங்கிறான்.ஆனா விழிப்புணர்ச்சி விழிப்புணர்ச்சின்னு ஊரெல்லாம் பாடம் சொல்லி கடைசில நீங்க குருட்டு திராவிடனா ஆவாதீங்கடா.

பால்தாக்கரேவுக்கு காட்டிட்டு பம்பாய் படத்தை ரிலீஸ் செய்த மணிரத்னம் இதை கலைஞருக்கு காட்டினாரா? கலைஞர் ஏன் படத்தை அனுமதித்தார்?

மணிரத்னம் போன்ற பார்ப்பனியவாதிகளின், ரசிகர்கள், அரசியல் அடிமைகளின் கதாநாயகனாக வேண்டுமானால் எம்ஜிஆர் இருக்கலாம்.

சுயமரியாதையும் சுய அறிவும் கொண்ட ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழர்களின் கதாநாயகன், வழிகாட்டி கலைஞர் அவர்கள் தான்.

மகிழ்ச்சி