சனி, 6 மே, 2017

பாகுபலி

நேற்று மூலக்கடை சண்முகாவில் காலைக்காட்சி பாகுபலி பார்த்தேன்.சண்முகா திரையரங்கில் படம் பார்த்து வெகுநாட்களாகி விட்டது.அதிக வேலை இருந்தததனால் அருகிலேயே உள்ள திரையரங்கிற்குச் சென்று குடும்பத்துடன் பார்த்தாகி விட்டது.



அதிகமான பொருட்ச்செலவைக் கோரும் இப்படத்தை Back to Back ஆக இரண்டு பாகங்களாக இயக்கியளித்த ராஜமவுலி பாராட்டப்பட வேண்டியவர் தான்.









































ஆனால் இப்போது வரும் படங்கள் பிரம்மாண்டத்தையும் பொருட்செலவையும் தொழில்நுட்பங்களையும் நம்பியே வருகின்றன.சில படங்கள் சில தொழில்நுட்பங்கள் இருப்பதாக நம்பவைக்கப் பார்க்கின்றன.எந்திரன்,ஷமிதாப்,தனி ஒருவன் போன்ற படங்கள் இதற்கு உதாரணமாகின்றன.

நான் முதல் படத்தைப் பார்க்காததால்,முதல் படத்தின் முடிவில் போடப்பட்ட மர்ம முடிச்சைப் பார்க்காததால் இரண்டாம் படத்தின் இடைவேளைக்கு முந்தைய பகுதியை மட்டும் மிகவும் ரசித்துப் பார்க்க முடிந்தது.





சத்யராஜ் ,ரம்யா கிருஷ்ணன் ஆகிய அனுபவமிக்க நடிகர்களின் வேடங்கள் கனமானவையாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் அவை வில்லனின் கைப்பாவைகளாகவே இருக்கின்றன.கண்களுக்கு விருந்தாக, காட்சிகளைப் படைத்துக்காட்டுவதில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையில் கருத்தும் கவனமும் செலுத்தவில்லை.

வரலாற்று புனைவு படங்களில் பி.ஆர்.பந்துலு  இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களும் கே.சங்கர் இயக்கிய அடிமைப்பெண்ணும் சிறந்த படங்கள்.







இரட்டையர் ஆள்மாறாட்டக் கதைகளாக அமைந்த படங்களில் எம்ஜியாரின் நாடோடி மன்னனும் சிவாஜியின் உத்தமபுத்திரனும் வடிவேலுவின் இம்சை அரசன் 23-ம் புலிகேசியும் சிறந்த வரலாற்றுப் புனைவு பொழுதுபோக்கு திரைப்படங்கள்(Historical Fiction Entertainers).



இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் வெற்றி விழா


பாகுபலி மிகச் சாதாரணமானதொரு படமே.இதனைப் போற்றுவதோ ஏற்றி வைத்துப் பேசுவதோ ஏற்புடையதல்ல.





சத்யராஜ் இதுபோன்ற வேடங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. சத்யராஜ் வாட்டாள் நாகராஜுக்கு தெரிவித்த வருத்தம் கூட படக்குழுவினர் கொடுத்த அழுத்தத்தினாலோ என்று "என்னால் பிரச்சனை வருமென்றால் என்னை வைத்துப் படமெடுக்க வேண்டாம்.நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதே பெருமை" என்ற அவரது பேச்சிலிருந்தே எண்ணத் தோன்றுகிறது.






1 கருத்து:

  1. சரியாக உங்கள் எண்ணங்களை பதிந்து இருக்கிறீர்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு