திங்கள், 27 மார்ச், 2017

வந்தார் பில்லா வென்றார் கபாலி - 02

அபூர்வ ராகங்கள் படத்தில் இளம்வயதில் நடுத்தர வயது நோயாளியாக வேடமேற்று அறிமுகமானார் ரஜினிகாந்த்.

தன்னுடைய சிறப்பான நடிப்பாற்றலால் Abhimaan(1973), Saudaagar(1973), Chupke Chupke(1975), Kabhie Kabhi(1976) போன்ற படங்களில் பல மாறுபட்ட வேடங்களையும் திறமையாகச் செய்து வந்தார் அமிதாப்.


1976ல் மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறைக் கதாநாயகனாகத் தோன்றி வில்லன் நடிகராக அறியப்பட்டார் ரஜினி. தன்னுடைய சிகெரெட் ஸ்டைலை இப்படத்திலேயே அறிமுகப்படுத்தினார்.






1977 ல் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த அமிதாப் 1978 ல் வெளியான, சந்திர பாரோட் இயக்கி, சலீம்-ஜாவேத் எழுதிய Don திரைப்படத்தின் மூலம் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆனார்.

1977ல் வில்லனாகவும் நல்ல வேடங்களிலும் மாறி மாறி நடித்து வந்த ரஜினிகாந்த் 1978ல் கருப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்ட பைரவி படம் தொடங்கி முள்ளும் மலரும், சிங்கப்பூரில் வண்ணமயமாக எடுக்கப்பட்ட பிரியா ஆகிய படங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தார்.


1978ல் வெளியாகி, புகழ்பெற்ற Don திரைப்படத்தை கே.பாலாஜி தமிழில் 'பில்லா' என்ற பெயரில் படமாக்கினார்.அதுவரை சிவாஜியை வைத்தே படமெடுத்து வந்த அவர் முதல்முறையாக அடுத்த தலைமுறை நடிகரான ரஜினியுடன் இணைந்தார்.இப்படம் 260 நாட்கள் ஓடி ரஜினியை முன்னணி கதாநாயகனாக வலிமையாக நிலைநிறுத்தியது.



1981 ல்  Deewaar(தீவார்)1975 திரைப்படத்தை தீ என்ற பெயரில் ரஜினி-பாலாஜி கூட்டணியே வெளியிட்டது.ஷஷிகபூர் வேடத்தில் சுமனும் நிருபா ராய் வேடத்தில் சௌகார் ஜானகியும் நடித்தனர்.மூலப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு பாடல் காட்சிகள் இல்லை.ரஜினியின் வேடம் இந்தியில்  உள்ளதைப்போல்  அத்தனை இறுக்கமாக வடிவமைக்கப்படவில்லை.

இந்திப்படங்களைப் பொறுத்தவரை யஷ் சோப்ரா,ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற தரமான படைப்பாளிகள் இருந்தனர். ஆனால் தென்னிந்தியப் படங்கள் பெரும்பாலும் மசாலாப் படங்களே.அவையே  சூப்பர் ஸ்டாரைத் தீர்மானிப்பவையாக உருமாறத் தொடங்கின.எனவே இப்படத்தைத் தவிர அமிதாப் சிறந்த நடிகராக அறியப்பட்ட எந்தப்படத்தையும் ரஜினி ரீமேக் செய்யவில்லை.

யஷ் சோப்ரா 
 சச்சின் தேவ் பர்மன்,அமிதாப், ரிஷிகேஷ் முகர்ஜி



**************** தொடரும் ****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக