இந்திப்படவுலகில்
மகத்தான ஆண்டு.
தமிழ்ப்படவுலகில் மறக்க
முடியாத ஆண்டு.
1969 ல் வெளியான
ஆராதனா முதல் 1974ல் வெளியான பிரேம்
நகர் வரை தன் கொடியை
உயரப் பறக்கவிட்டு இந்திய சூப்பர் ஸ்டார்
என்ற கருத்து பேசப்படத் தொடக்கப்புள்ளியாக
விளங்கிய ராஜேஷ் கன்னா தன்
செல்வாக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகவும் கூடிய
சீக்கிரத்தில் மொத்தமாகவும் இழந்த ஆண்டு அது.
![]() |
| ஆராதனா படத்தில் ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கன்னா மற்றும் சாச்சா ஜோதாவில் அவரது இரட்டை வேடங்கள் |
பாலிவுட் வண்ணமயமாக ஒளிரத்தொடங்கிய சில ஆண்டுகளில் 1969ல் தன்
ஒரே கருப்பு-வெள்ளைப் படமான “சாத் ஹிந்துஸ்தானி” படத்தில் ஏழு முக்கிய வேடங்களில்
ஒருவராக இஸ்லாமியக் கவிஞர் அன்வர் அலி என்ற வேடமேற்று அறிமுகமான அமிதாப் பச்சன் அப்படத்திற்காக
சிறந்த புதுமுகத்திற்கான தேசிய விருது பெற்றார்.
1971ல் கை கொடுத்த தெய்வம் படத்தின் இந்தி பதிப்பான ப்யார் கி கஹானியில் கதாநாயகனாக
நடிக்கத் தொடங்கினார்.அந்தப் படத்தில் நடிகர் திலகத்தைப் போலவே பாரதியார் வேடமிட்டு பாடல்காட்சியில் நடித்தார் அமிதாப்.
பாம்பே டு கோவா(மெட்ராஸ் டு பாண்டிச்சேரி),சன்ஜோக்(இரு கோடுகள்) ஆகிய படங்களின் மூலம் நாயகனாகத் தொடர்ந்து வந்த அமிதாப் பச்சனுக்கு 1973ல் வெளிவந்த ஜஞ்சீர் என்ற திரைப்படம்
பெருவெற்றியைப் பெற்றுத் தந்தது. அமிதாப் பச்சன்,பிரான் இருவரது வேடங்களையும் ஏற்று
நடித்து, இப்படத்தை புரட்சி நடிகர் எம்ஜியார்,
சிரித்து வாழ வேண்டும்(1973) என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
Zanjeer
படத்தின் கதாசிரியர்கள் என்ற முறையில் அமிதாப் பச்சனின் திறமையை நன்கு அறிந்த சலீம்-ஜாவேத் 1975ல் தீவார் படத்துக்கு ராஜேஷ் கன்னாவிற்கு பதிலாக அமிதாப்பின் பெயரைப் பரிந்துரைத்தனர்.அதிரடி கதைமன்னர்களான இவர்கள் எழுதிய பெரும்பாலான படங்களில் அமிதாப் பச்சனே கதாநாயகனாக இருந்தார்.
சலீம்-ஜாவேத் எழுதி, 1975ல் வெளியான ஷோலே,
Key of Indian Cinema என பாராட்டப்பட்டு
Gangster படங்களின் தொடக்கமாக இந்தியாவிற்கே அமைந்த தீவார் ஆகிய படங்களில் நடித்த பச்சன்
Angry Young Man என்ற இமேஜைப் பெற்று சூப்பர் ஸ்டாராக உயரத் தொடங்கினார்.
![]() |
| தீவார் படத்தில் |







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக